Chief Minister Edappadi Palanisamy was Administered Dose of COVID Vaccine

YouTube video

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இந்திய அரசும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 2 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரானா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்புசி மீதான பயத்தை மக்களிடமிருந்து போக்க அரசியல் தலைவர்களும் முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் பயமின்றி தடுப்பூசயைப் போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.