செஃப் வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தவர் செஃப் வெங்கடேஷ் பட்.
நான்கு சீசன்களில் நடுவராக இருந்து வந்த தற்போது ஐந்தாவது சீசனில் இருந்து வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்க உள்ளார்.
இப்படியான நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் ஆரம்பிக்கலாமா என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இவர் பங்கேற்க உள்ள புதிய வீடியோ குறித்து சொல்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இணைந்துள்ளது.
இதோ அந்த வீடியோ