துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் காரணமாக வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

துணிவு படத்தால் திடீரென மாற்றப்பட்ட வாரிசு பட ரிலீஸ் தேதி - இதுதான் புது ரிலீஸ் தேதி.? வைரலாகும் தகவல்

இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக விஜயின் வாரிசு திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது‌. இதனால் துணிவு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்களின் தெரிவித்திருந்தார்.

துணிவு படத்தால் திடீரென மாற்றப்பட்ட வாரிசு பட ரிலீஸ் தேதி - இதுதான் புது ரிலீஸ் தேதி.? வைரலாகும் தகவல்

இப்படியான நிலையில் தற்போது வாரிசு படக்குழு திடீரென ரிலீஸ் தேடியை ஜனவரி 11ஆம் தேதிக்கு மாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.