Central Government Offer on Micro Processor Research
Central Government Offer on Micro Processor Research

Central Government Offer on Micro Processor Research : உள்நாட்டிலேயே மைக்ரோ புராசஸர் கொண்டு புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கப்படுவோருக்கு ரூ. 4.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எனவே 32 பிட் திறன் உள்ள ‘சக்தி’, 64 பிட் திறன் உள்ள ‘வேகா’ ஆகிய இவ்விரு நுண்செயலி களைக் கொண்டு புதிய தொழில்நுட்ப கருவிகள் கண்டு பிடிக்க உருவாக்கும் வகையில் ‘சுதேசி நுண்செயலி சவால்’ என்ற பெயரில் தொழில் நுட்ப போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயசார்பு பாரதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் புதிய ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கும் வகையிலும் நாட்டில் ஆராய்ச்சி அபிவிருத்தி மேம்படுத்தவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரிவிற்க புதிய திட்டம்!! மத்திய அரசு

இந்தத் துறையில் நடப்பு நிதியாண்டில் நடத்தப்படும் மூன்றாவது போட்டி இதுவாகும்.

இந்தப் போட்டியானது நாட்டின் தொழில்துறை தேவைகளை நிறைவேற்ற உதவும். அது மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்பு, உரிமை விவகாரங்கள், வழக்கற்ற தொழில்நுட்பங்களை மாற்றுதல், இறக்குமதியை குறைதல் உள்ளிட்ட பல நோக்கங்களை கொண்டுள்ளது.

2021 ஜூனுக்குள் புதிய கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கவேண்டும் எனவே இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 10 குழுக்களுக்கு ரூ 2.3 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படும்.

அவர்களது ஓராண்டு ஆராய்ச்சிக்கு அரசு உதவும் அதை எடுத்து 25 பேருக்கு ஒரு கொடியும் அரையிறுதியில் பங்கேற்கும் 100 பேருக்கு ஒரு கோடியும் பரிசாக வழங்கப்படும்.

இதில் அனைத்து மாணவர்களும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோரும் கலந்து கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.