சிலிர்க்க வைக்கும் கதை.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.
சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் என எக்கசக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதைக்களம் :
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் வெள்ளையர்கள் ஆட்சி நடந்து கொண்டிருக்க சுதந்திரத்திற்காக தனுஷ் அண்ணா சிவராஜ் போராடி கொண்டிருக்க வெள்ளைக்காரன் சிப்பாயில் இணைய ஆசை கொண்டு ஒரு கட்டத்தில் ராணுவத்திற்கும் செல்கிறார்.
துப்பாக்கி சுடுதலை திறம்பட கற்று கொண்டு தேர்ந்த வீரனாக மாறுகிறார். இந்த நிலையில் வெள்ளையர்கள் தங்களை எதிர்த்து போராடுவார்களை சுட்டு தள்ள சொல்லி ஆர்டர் போட தனுஷ் கண்ணை மூடிக்கொண்டு தன்னுடைய மக்களையே சுட்டு தள்ளுகிறார்.
ஒரு கட்டத்தில் தனுஷ் மனம் மாறி எப்படி இந்தியாவுக்காக போராட தொடங்குகிறார்? என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை.
தனுஷ் கேப்டன் மில்லராக தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார்.
சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் என அனைவரும் திறமையான நடிப்பால் நடத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஜிவி பிரகாஷின் இசை பிரமாதம். அருண் மாதேஸ்வர் அசத்தலான கதையை கையில் எடுத்து மிரட்டலாக கொண்டு சென்றுள்ளார்.