கேப்டன் மில்லர் திரைப்படத்திலிருந்து பிரபல வில்லன் நடிகர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் வரும் 30 ஆம் தேதியான நாளை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதை சமீபத்தில் படக்குழு அறிவித்து ரசிகர்களை உற்சாக படுத்தியது. இந்த நிலையில் இப்படத்தில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களின் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் டானியல் பாலாஜி இப்படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் அவர் கால்ஷீட் கொடுத்த நாட்களில் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கவில்லை என்பதால் அவர் விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை தேர்வு செய்யும் பணியில் தற்போது படக்குழு ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.