கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்து படகுழு வெளியிட்டு இருக்கும் புதிய போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

பலத்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி வைத்திருக்கும் இப்படம் தொடர்பான அறிவிப்பிற்காக நாள்தோறும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக படகுழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அப்போஸ்டர் வெளியாகும் நேரம் குறித்த தகவலை புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.

அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மிரட்டலான போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. அதனை ரசிகர்கள் பயங்கரமான எதிர்பார்ப்போடு ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.