
லியோ படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சஞ்சய் தத் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆமாம் இந்த படம் கிட்டத்தட்ட 350 கோடி முதல் 375 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விஷயம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. விஜய் திரைப்படத்தில் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக லியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.