பத்தா திரை விமர்சனம்

அட்லி தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜ்ஜோ மோல், அர்ஜுன் சிதம்பரம், உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பத்தா.
1980 களில் சென்னையில் இருக்கும் பிரபல ரவுடி. கலாச்சாராயம், அடிதடி என ஊரே பயந்து நடுங்கும் ஒரு டான். வீட்டுக்குள்ளேயே சிங்கம் கூட வைத்து வளர்க்கிறார் என்னும் அளவிற்கு பத்தாம் மீது அதீத பயம் ஊர் மக்களுக்கு. அப்படிப்பட்ட நிலையில் எதிர்பாராத ஒரு சம்பவத்தில் பிக்கி கொள்கிறார் பத்தா என்கிற பக்தவச்சலம் (விஜய் சேதுபதி). அது என்ன பிரச்சனை எப்படி அதிலிருந்து மீண்டார் என்பது மீதி கதை.
வழக்கம் போல விஜய் சேதுபதி ஒன் மேன் ஆர்மையாக பத்தாவாக, படம் முழுக்க பந்தா காட்டுகிறார். ரவுடியாக அடாவடிக் காட்டும் பொழுதும், உணர்வு குவியல்களுக்குள் சிக்கிக் கொண்டு தவிப்பதும் என அவருடைய நடிப்பை பற்றி இனி என்ன நாம் வர்ணிக்க மீதி உள்ளது.

லிஜ்ஜோ மோல் பாந்தமான அழகி, ஹோம்லி லுக் என மனதில் நிறைகிறார். அனைத்தும் தாண்டி 15 நிமிடங்கள் மேல் நம்மை தான் நடிப்பால் ஆட்கொள்கிறார் சபரி கேரக்டரில் நடித்த சிறுவன். அவர் திரும்பிக் கொண்டே அழும் அந்த காட்சி நிச்சயம் காண்பவர்களை கண்கலங்க வைக்கும்.
பாலாஜி தரணிதரன் என்றாலே சட்டென்று நமக்கு நினைவு வருவது “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படம் தான். அதிலிருந்து பல மொமேண்டுகளை இந்த படத்தின் முதல் பாதியில் கொடுத்திருக்கிறார்.
கலை இயக்குநர் கண்ணன்.எஸ் மற்றும் செல்வகுமார் ஒளிப்பதிவில் 80ஸ் உலகம் மிக அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கலைவாணன் எடிட்டிங் எங்கேயும் கதையை விட்டு வெளியே செல்லாமல் சீராக செல்கிறது. சாய் அபயங்கர் இசையில் செல்லமே மகளே பாடல் அருமை. எனினும் இன்னமும் ஒரு ஸ்பார்க் குறைவாகத் தெரிகிறது.
மொத்தத்தில் நம்மை பார்த்து எல்லோரும் பயந்து நடுங்குகிறார்கள் என்பது வாழ்க்கை அல்ல. நம்மை நாம் யார் என தெரிந்து கொள்வது தான் வாழ்க்கை. என கருத்து எடுத்து வைத்த விதத்தில் பத்தா தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது.

பத்தா திரை விமர்சனம்
புரிதலுக்கான ஒரு பயணம்!
- Rating