Daisy Edgar Jones :
Daisy Edgar Jones :

Daisy Edgar Jones : பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்பவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Daisy Edgar Jones :
Daisy Edgar Jones :

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாகத்தான் ஒப்பந்தமானார் டெய்சி.

நடிக்க வாய்ப்பு கொடுத்த சூப்பர் டீலக்ஸ் இயக்குனரையே பங்கமாக கலாய்த்த சமந்தா – வைரலாகும் ட்வீட்!

ஆனால் திடீரென அவர் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கான காரணத்தையும் தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் குடும்ப சூழல் காரணமாக துரதிர்ஷ்டவசமாக சிறப்பு வாய்ந்த இந்தப்படத்தில் தன்னால் பங்கேற்க முடியாமல் போனதாகவும் இந்த கேரக்டரில் வேறு யார் நடித்தாலும் அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பீரியட் படமாக உருவாகும் இப்படத்தில் இவர் ஆங்கிலேயராக நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.