Samantha Teasing
Samantha Teasing

Samantha Teasing – நடிக்க வாய்ப்பு கொடுத்த சூப்பர் டீலக்ஸ் இயக்குனரையே சமந்தா கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் தியாகராஜா குமார ராஜா. இவர் தற்போது சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

நேற்று ( மார்ச் 29 ) உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஸ்கின் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் சமந்தா உட்பட அனைவரின் நடிப்பும் பிரமாதம் என பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒருவர் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இதே போல் நிறைய படங்களை இயக்க வேண்டும் என கூறி ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்த்த சமந்தா படங்கள்னு சொல்லாதீங்க. அவர் அடுத்த படத்தை எடுக்க 18 வருடங்கள் கூட ஆகலாம், சோ படம்னு சொல்லுங்க என கலாய்த்துள்ளார்.

ஆரண்ய காண்டம் திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டில் வெளியானது. 8 வருடத்திற்கு பிறகு தான் தியாகராஜா இந்த படத்தை இயக்கி இருந்தார்.

இதனால் தான் சமந்தா இப்படி கலாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.