Boomerang Trailer 2

Boomerang Trailer  : பூமராங் படத்தின் புதிய ட்ரைலர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆர்.கண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அதர்வா, ஆர்.ஜே பாலாஜி, மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பூமராங்.

ரதன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் 8-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீஸர், ட்ரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

கடைசில் இப்படி தண்ணீருக்கும் காற்றுக்கும் போராட வச்சிடீங்களே என்ற வசனங்கள் எல்லாம் இன்றைய அரசியலையும் சமூகத்தையும் நிலையில் அப்பட்டமாக தோலுரித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதே சமயம் இந்த ட்ரைலர் வெளியான 1 மணி நேரத்தில் லட்சத்துக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.