Bomb Blast Warning to Ajith Home
Bomb Blast Warning to Ajith Home

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bomb Blast Warning to Ajith Home : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என இருந்து வருபவர்.

தன்னுடைய ரசிகர்களை உங்கள் குடும்பத்தை மட்டும் பாருங்கள் என கூறி ரசிகர்கள் மன்றத்தையே கலைத்தார். இதனாலேயே இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது எனலாம்.

இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லாரும் அனிருத்தை பார்த்திருப்பீங்க இந்த மினிருத்தை பார்த்திருக்கீங்களா?? – அனிரூத் வெளியிட்ட க்யூட் புகைப்படம்

இதனையடுத்து போலீசார் அஜித் வீட்டில் சோதனையில் ஈடுபட்டதும் இது வெறும் புரளி என தெரிய வந்துள்ளது. மேலும் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டியவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்னதாக இதே போல் ரஜினி மற்றும் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.