அஜித் ரசிகர்களை கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்‌.

Blue Sattai Maran Comments About Ajith Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்தின் தலைப்பு விடாமுயற்சி என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இந்த படம் பற்றி தற்போது வரை எந்தவித அப்டேட் வெளியாகவில்லை. 

அறிவிப்பு வெளியாகி 300 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் அப்டேட் வரவில்லை என அஜித் ரசிகர்கள் பேனர் அடித்து அப்டேட் கேட்டுள்ளனர். இதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் இவனுங்க வேற அடிக்கடி தமாஷ் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்ன அஜித் ரசிகர்களை கலாய்த்து உள்ளார். 

இது குறித்த பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.