Blessed Grandmother of Virat Kohli : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, Mrs Charulatha

Blessed Grandmother of Virat Kohli :

நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் போட்டியை காண வந்த இந்திய ரசிகர் ஒருவர் செயல் வெகுவாக விராட் கோலியை ஈர்த்தது. வயது 87 உள்ள பாட்டிதான் அந்த ரசிகர்.

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு முறை பவுண்டரி மற்றும் சிக்சர்கள் அடித்தபோதும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தபோதும் அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி பரபரப்பானது.

அவ்வப்போது இந்த பாட்டியை மைதானத்தில் இருந்த ஸ்க்ரீனில் பார்த்த விராட் கோலி, போட்டி முடிந்ததும் நேராக அந்த பாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார்.

இந்திய அணியின் வெற்றிக்கு ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி. குறிப்பாக 87 வயது சாருலதா பட்டேல் அவர்களுக்கு எனது நன்றி.

திருநங்கையாக தாதா 87 நாயகி பட்ட கஷ்டம் – புகைப்படங்களை பாருங்க.!

கிரிக்கெட் ரசிகராக இருக்க வயது ஒரு பொருட்டு அல்ல என்பதை நிரூபித்து எங்களுக்கு ஊக்கம் அளித்த அவருக்கு அணியின் சார்பாக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அவருடைய ஆசியால் அடுத்தடுத்த போட்டிகளிலும் வெல்வோம்’ என்று கோலி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயங்குவது இல்லை. அதற்கு பதிலாக அவர்கள் இந்திய அணியின் வெற்றியை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.