BJP vs Meme Creator
BJP vs Meme Creator

BJP vs Meme Creator – மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாவட்டங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.

மேலும், இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடைபெற்றதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் முடிவுகளாக எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாவட்டங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்பட்டது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகமடைந்து இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் 3 மாநிலத்திலும் ஆட்சியை பறிகொடுக்கும் நிலை உருவாகிவிடுமோ என பாஜக தலைவர்களும், தொண்டர்களும் சோகமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாஜகவின் வீழ்ச்சியை நெட்டிசங்கள் மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில், பாஜகவை தெறிக்க விடுகின்றனர்.

இதுவரை “தாமரை மலரும் என்று கூறி வந்த நிலையில், தற்போது தாமரை மல்லாந்தே தீரும்” என்று கூறி வருகின்றனர்.