வலிமை நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அஜித் செய்த இந்த விஷயம் தான் காரணம் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Bismi About Valimai Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதேசமயம் படம் முழுவதும் ஒரே சண்டை என நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

சண்டைகளுக்கு நடுவே ஆங்காங்கே குடும்ப பாசம் எமோஷன் காட்சிகள் ஆகியவை சரியாக பொருந்தவில்லை என சிலர் கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் தல அஜித் அவர்கள் தான் என கூறி வருகின்றனர்.

அதாவது சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி அளித்துள்ள பேட்டி ஒன்றில் வினோத் இந்த படத்தின் கதையை சொல்லும்போது அதைக் கேட்டு அஜித் கிட்டத்தட்ட ஒன்பது முறை கதையின் மாற்றத்தை சொன்னதாக கூறியுள்ளார். இயக்குனர்கள் ஒரு பார்வையை கதையை எழுதுவார்கள். அதைக் கேட்கும் ஹீரோக்கள் தங்களுக்கு மாஸ் இருக்கவேண்டுமென கதையில் மாற்றங்களை செய்வார்கள் ‌. அப்படி அஜித் செய்த மாற்றங்கள் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணம் என நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர்.

https://twitter.com/RakeshBR55/status/1496758502211031040?t=y6fTOUIvRESue4wCR30PZg&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.