Bigil Rayappan Character Secrets
Bigil Rayappan Character Secrets

பிகில் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் தான் காரணம் என தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

Bigil Rayappan Character Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிகில். இந்தப் படத்தை இயக்குனர் அட்லி இயக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்தார்.

இப்படத்தில் விஜய் மைக்கேல் மற்றும் ராயப்பன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். மைக்கேல் என்பது மகன் வேடம் ராயப்பன் என்பது அப்பா வேடம் என்பது அனைவரும் அறிந்ததே.

முதலில் இந்த அப்பா வேடத்தில் விஜய் நடிப்பதாக இல்லை. வேறொரு நடிகரை நடிக்க வைக்கத் தான் படக்குழு முயற்சி செய்துள்ளது.

இந்த சமயத்தில் தான் மைக்கேல் கதாபாத்திரத்திற்காக டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக மும்பையை சேர்ந்த பிரீத்தி ஸ்ரீ என்ற காஸ்மெட்டாலஜிஸ்ட் வர வைக்கப்பட்டுள்ளார்.

6 வருடத்திற்குப் பிறகு நேருக்கு நேர் மோத போகும் தல தளபதி? – வெளியானது வலிமை, தளபதி 65 ரிலீஸ் தேதி!

அவர் சுஷாந்த் சிங் நடித்த Chhichhore என்ற படத்திலும் பணியாற்றியுள்ளார். அப்படத்தில் சுஷாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

இதனையடுத்து தான் ஏன் விஜய்யே ராயப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்ற யோசனை உதித்தது. அதன் பின்னர் ராயப்பன் கதாபாத்திரத்திற்கான டெஸ்ட் ஷூட் நடத்தினோம். விஜய்க்கு பக்காவாக பொருந்தியது.

இதனையடுத்து அவரும் நடிக்க ஒப்புக் கொண்டதால் இரட்டை வேடத்தை ஏற்று நடித்தார். அவரும் முதல் முறையாக வயதான தோற்றத்தில் நடித்ததால் பார்த்ததும் புல்லரித்து விட்டது எனக் கூறியுள்ளார்.

நாங்கள் எதிர்பார்த்தது போலவே அனைவருக்கும் ராயப்பன் கதாபாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது எனவும் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

பிகில் படத்தை பார்த்த பிறகு விஜய் ரசிகர்கள் ராயப்பன் கதாபாத்திரத்தினை மட்டும் வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குங்கள் என அட்லிக்கு கோரிக்கை வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.