Bigil Loss or Profit
பிகில் படம் லாபம் கொடுத்ததா? இல்லையா? என்பது பற்றி அர்ச்சனா கல்பாத்தியே கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றாலும் படத்தின் பட்ஜெட் ரூ 180 கோடி என்பதால் இப்படம் லாபத்தை கொடுத்ததா? இல்லையா? என்ற கேள்வியும் விவாதமும் சமூக வளையதளங்களில் வலுத்து கொண்டே தான் இருந்தது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டிவி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பிகில் படம் எங்களுக்கு நல்ல ப்ராபிட் கொடுத்த படம் தான் என கூறியுள்ளார்.

அப்புறம் என்ன ரசிகர்களே போட்றா வெடியைனு கொண்டாட்டத்தை தொடங்குங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.