பிக் பாஸில் 2 எலிமினேஷன் மட்டும் இல்ல.. போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! சிக்கப்போகும் நபர் யார்?
பிக் பாஸ் எலிமினேஷன் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே யாரும் எதிர்பாராத விதமாக சாச்சனா மற்றும் ஆனந்தி இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டனர். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் இன்னும் 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இதனால் இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிலும் சத்யா மற்றும் தர்ஷிகா இருவரில் யாராவது வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இரண்டு எவிக்க்ஷன் என்று சொன்னதே போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்த நிலையில் இந்த தகவலும் அவர்களுக்கு ஒரு பேர் அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.