Pushpa 2

பிக் பாஸில் பணப்பெட்டியுடன் வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? யார் வெளியேறினால் பெஸ்ட்.. உங்களின் கருத்து என்ன?

பணப்பெட்டியுடன் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று பார்க்கலாம்.

biggboss tamil 8 latest update viral

biggboss tamil 8 latest update viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை எந்த ஒரு சீசனிலும் இல்லாத அளவிற்கு ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வந்தனர்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலுமாக புதுவிதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வைல்ட் கார்ட் நாக் அவுட் என்று ஆறு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். அவர்கள் போட்டியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளனர் என்று சொல்லலாம். சிலர் சிறப்பாக விளையாடியிருக்கிறாய் என்று சொல்ல சிலர் இன்னும் நீ இப்படி பண்ணி இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஷாலிடம் சாச்சனா,சுனிதா என இருவரும் தர்ஷிகா மற்றும் ஹன்சிகா இருவரும் வெளியேறியதற்கு காரணம் நீதான் என்று சொல்லி வருகின்றனர்.

இதனால் விஷால் முகம் மாறி அவர் கண்கலங்கி தன் மீது இருக்கும் நம்பிக்கையை இழந்து வருகிறார் என்றும் சொல்லலாம். இதனால் அவர் பணப்பெட்டியை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் அருண் மற்றும் பவித்ரா ஆகியோர் பண பெட்டியை எடுத்தால் சிறப்பு என்றும் பலர் கூறி வருகின்றனர்.

யார் பணப்பெட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்.. யார் எடுக்க வேண்டும்? யார் எடுக்கக் கூடாது? என்று உங்களுடைய கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

biggboss tamil 8 latest update viral

biggboss tamil 8 latest update viral