ஏழு சீசனுக்கும், எட்டாவது சீசனுக்கும் என்ன வித்தியாசம்? வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் புதுவிதமான ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி, விளையாட்டும் மாறனும்னா வீடு மாறினால் நடக்கணும் நாங்க நினைச்சோம். அந்த வீடு ரெண்டு நாடாச்சு அந்த நாட்ல நல்ல ஆட்சி புரிஞ்சாங்களா? கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தினார்களா? கேட்போம் என்று பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் ஏழு சீசனுக்கும் எட்டாவது சீசனுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியை கேட்கிறார். அதற்கு முத்துக்குமரன் ஏழு சீசன்ல போட்டியாளர்கள் இருந்தாங்க இந்த சீசன்ல எல்லாரும் புனிதர்களாக இருக்காங்க என்று சொல்லுகிறார்.
சௌந்தர்யா இந்த சீசன் சேஃப் கேம் விளையாடுற மாதிரி இருக்கு என்று சொல்ல, ஜாக்லின் எங்க சீசன் நாங்களே புகழ்ந்துக்கிட்டா ரொம்ப கூச்சமா இருக்கு சார் என்று சொல்லிவிடுகிறார். சிவகுமார் இதுவரையும் நான் நூறு பாத்திரம் கழுவியிருப்பேன் இவங்க எப்படியும் ஆயிரம் பாத்திரம் கழுவி இருப்பாங்க சார் என்று சொல்ல விஜய் சேதுபதி, ஏழு சீசன் பார்த்திருக்கேன் எட்டாவது சீசன் நீங்க பண்றது ஐயோ என்று கைதட்டுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram