தல அஜித் குமாரின் துணிவு திரைப்படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபல காதல் தம்பதிகளாக திகழும் அமீர், பாவனி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரை வட்டாரத்தில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்பொழுது இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

துணிவு திரைப்படத்தில் இணைந்துள்ள பிக் பாஸ் காதல் ஜோடி!!! - சூப்பரான புது அப்டேட் வைரல்!.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வைரலானவை தொடர்ந்து இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

துணிவு திரைப்படத்தில் இணைந்துள்ள பிக் பாஸ் காதல் ஜோடி!!! - சூப்பரான புது அப்டேட் வைரல்!.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அஜித்ுடன் இணைந்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபல காதல் தம்பதிகளாக திகழ்ந்து கொண்டிருக்கும் அமீர், பாவனி இருவரும் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி மேலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான சிபியும் முக்கியமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.