பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றுள்ளார் ராஜூ.

Bigg Boss5 Grand Finale Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்றோடு மொத்தமாக முடிவடைய உள்ளது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனார் ராஜு.. இரண்டாவது இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா? வெளியானது முழு விவரம்

நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே ஷூட்டிங் நேற்று முழுமையாக நடைபெற்று முடிந்தது. நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி காலத்தில் இருந்த ஐந்து பேரில் நிரூப் மற்றும் அமீர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து இறுதிப் போட்டியில் ராஜு, பிரியங்கா மற்றும் பாவணி ஆகியோர் மட்டுமே உள்ளனர். ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்று வந்த ராஜு மக்களின் கணிப்புப்படி டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றுள்ளார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனார் ராஜு.. இரண்டாவது இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா? வெளியானது முழு விவரம்

இரண்டாவது இடத்தினை பிரியங்கா பிடித்துள்ளார். அவருக்கு அடுத்ததாக இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாவனி உள்ளார். இன்றுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து வெகுவிரைவில் பிக்பாஸ் OTT ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.