
காதல் என்ற பெயரில் தன்னையும் மேலும் பதினைந்து பெண்களையும் விக்ரமன் ஏமாற்றி இருப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
youtube சேனல் ஒன்றில் தொகுப்பாளராகவும் விஜய் டிவி சீரியல்கள் சிலவற்றிலும் நடித்து அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் பிரபலமானவர் விக்ரமன்.
பிக் பாஸ் நிகழ்ச்சிகள் அறம் வெல்லும் என சொல்லி பேசி வந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. பிக் பாஸ் டைட்டில் இவர் தான் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் அசீம் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் விக்ரமன் மக்கள் நினைப்பது போல அவர் நல்லவர் இல்லை என கிருபா முனுசாமி என்ற பெண்மணி காதல் என்ற பெயரில் தன்னை ஏமாற்றியதாகவும் தன்னை மட்டும் அல்லாமல் மீண்டும் 15 பெண்களை ஏமாற்றியதாகவும் விக்ரமன் மீது புகார் கொடுத்துள்ளார்.
மேலும் விக்ரமன் தன்னுடன் நெருக்கமாக பேசிய whatsapp உரையாடல்களை அவர் ஷேர் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய மேனேஜர் என சொல்லிக் கொண்டு வேறொரு பெண்ணிடம் நெருக்கமாக பழகி இருப்பதால் போல் அதை விக்ரமனே ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் அவர்கள் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்துவதாக தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரமன் குறித்து அவர் வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.