பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் வருண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Varun With Mother : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் ஒருவர் தான் வருண்.

ஐசரி வேலன் அவர்களுடைய மகள் வழி பேரன் தான் வருண். இவர் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கேற்றாற்போல தன்னை மெருகேற்றிக் கொண்டே பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து அதன் பின்னர் பப்பி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

உலக பேட்மிண்டன் போட்டி : தெறிக்க விட்ட இந்திய வீரர்களின் ‘கெத்து’..

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கடினமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் டைட்டிலை பெறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குப்பத்துல வராத Corona..அமெரிக்கா Airport-ல வந்துடுச்சு -மேடையில் கலாய்த்த கமல்..! | SNSM | Audio HD

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஐக்கி பெர்ரி போட்டியாளர்களின் வீட்டிற்குச் சென்று வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வருண் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் வருண் அம்மாவை பார்த்த ரசிகர்கள் இவர்தானா வருணிண் அம்மா, இவரை நன்றாகவே தெரியும் என கமென்ட் அடித்து வருகின்றனர். ஆமாம் வருணின் அம்மா ஒரு பியூட்டிஷியன். இவர் பல தொலைக்காட்சி சேனல்களில் அழகு குறிப்புகளை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.