Bigg Boss Tamil
நேயர்களிடையே பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Bigg Boss Tamil : சென்ற வாரம் கஸ்தூரி வெளியேற்றத்திற்கு பிறகு, கவின் அடுத்த வாரம் வெளியற்றப்படலாம் என்ற கருத்து நேயர்களிடையே பொதுவாக உள்ளது.

ஆனால், இந்த வாரம் யாரும் வெளியேற்றப்பட வாய்ப்பு இல்லை என்பது போல ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் வீட்டில் முதலில் 16 போட்டியாளர்கள் இருந்தனர். பிறகு கஸ்தூரியின் வருகையால் 17-ஆக எண்ணிக்கை உயர்ந்தது.

இந்த நிலையில், வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் சம்பளம் பற்றின விவரம் தெரியவந்துள்ளது.

மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

வனிதா வெளியேறிய போது 1.5 லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டதாகவும், மீண்டும் வீட்டிற்கு சென்ற போதும் அது 2.5 லட்சமாக உயர்த்தி அளிக்கப்பட்டது.

மேலும், சேரன் வீட்டிற்கு வருவதற்கு முன் 15 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டது மட்டும் இல்லாமல், 1 லட்சம் சம்பளம் அளிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து வெளியேறிய சரவணன் அண்ணா 80,000, மதுமிதா 80,000 மற்றும் கஸ்தூரி 1.25 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள்.

வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கவின் 50,000, முகென் 50,000 தர்ஷன் 50,000 லாஸ்லியா 50,000 மற்றும் ஷெரின், சாண்டி 80,000 என போட்டியார்களின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.