இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்ட வைல்ட் கார்டு போட்டியாளர்..ரசிகர்கள் ஷாக்..!
இந்த வாரம் யார் எலிமினேஷன் ஆகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் விஜய் சேதுபதி சாச்சனா, ரஞ்சித், சிவக்குமார், ஆனந்தி இவர் நால்வரையும் நடுவில் உட்கார வைத்து எவிக்ஷனை பிக் பாஸ் பார்த்து பாரு என்று சொல்லுகிறார். உடனே பிக் பாஸ் ஆக்டிவிட்டி ஏரியாவில் ஒரு பிளாஸ்டிக் தொட்டிக்குள் பந்துகள் நிரப்பப்பட்டு அதில் டால் பொம்மைகள் இருக்கின்றன அதில் யாருடைய பெயர் இருக்கிறதோ அவங்க சேஃப் பேர் இல்லாத ஒரு நபர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று சொல்லுகிறார் போட்டியாளர்கள் நால்வரும் பொம்மையை தேடுகின்றனர்.
இந்த நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்ற சிவக்குமார் போட்டியிலிருந்து எலிமினேஷன் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.