Pushpa 2

தொடங்கிய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்.. தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.! வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 86 promo 1
bigg boss tamil 8 day 86 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் நெருப்பு குழி என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.அதில் போட்டியாளர்களின் போட்டோக்கள் இருக்க ஓடி வந்து அவர்களது போட்டோவை எடுத்து மணி அடிக்க வேண்டும் அப்படி யார் முதலில் மணி அடிக்கிறார்களோ அவர்கள் மற்ற போட்டியாளர்களை கேமிலிருந்து வெளியேற்றலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனால் முத்துக்குமரன் முதலில் மணி அடிக்க அவர் அருணை கேம்ல இருந்து வெளியேற்றி அவரது போட்டோவை எரித்து விடுகிறார். ஆக்ரோஷமாக போட்டியாளர்கள் விளையாட ரயானுக்கு அடிபடுகிறது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.