விஷால் மற்றும் ரவீந்தருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
விஷால் மற்றும் ரவீந்தர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 24 மணி நேரத்தில் நாமினேஷன் செய்யப்பட்டு சாச்சனா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு நாமினேஷன் தொடங்கிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப் போவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
ஆனால் இன்றைய ப்ரோமோவில் வெளியேறிய சச்சனா இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இரண்டாவது ப்ரோமோவில் ரியல் யார்?ஃபேக் யார்? என்ற டாஸ்கில் ஒவ்வொருவரும் கருத்துக்களுடன் ஒவ்வொரு போட்டியாளர்களின் முகத்தில் ஒட்டுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அனைவரும் முகத்தில் ஒட்டிய அந்த ஸ்டிக்கருடன் இருக்க, விஷால் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram