Suja Varunee Marriage

Suja Varunee Marrigae : பிக் பாஸ் புகழ் சுஜா வருநீக்கு இன்று அவருடைய காதலான சிவாஜி தேவ்க்கும் திருமணம் முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் சுஜா வருநீ. அதன் பின்னர் கமல்ஹாசனை தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்பா இல்லாமல் தன்னுடைய குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு வந்த சுஜா வருநீ தான் ஒருவரை காதலித்து வருவதாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கூறியிருந்தார்.

அதன் பின்னர் அவர் சிவாஜி கணேசனின் பேரனான சிவாஜி தேவை தான் காதலிக்கிறார் என்பது தெரிய வந்தது. சமீபத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.

இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இன்று உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

திரையுலக நட்சத்திரங்கள் பலரும் சுஜா வருநீ – சிவாஜி தேவ் திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தியுள்ளனர்.

இன்னும் அதிகமான புகைப்படங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here