பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் போட்டியாளர் யார் தெரியுமா? இந்த ட்விஸ்ட்ட யாரும் எதிர்பார்க்கல..!

Web Ads

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டாக கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டியாளர்களும் எலிமினேஷன் ஆகி உள்ளனர். பல சுவாரசியமான கேம்களுடனும் வாக்குவாதங்களுடனும் மகிழ்ச்சியுடனும் இந்த நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது.

bigg boss season 8 tamil wild card entry update
bigg boss season 8 tamil wild card entry update

அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று இந்த நிகழ்ச்சிக்கு யார் வைல்டு கார்ட்டாக வரப் போகிறார் என்ற கேள்வி இருந்து வருகிறது. தற்போது கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட மாயாவின் அக்கா ஸ்வாகதா என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் உள்ளே வந்தால் எப்படி இருக்கும்? இல்லை வேறு யார் வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்தால் நல்லா இருக்கும்? என்று எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

bigg boss season 8 tamil wild card entry update
bigg boss season 8 tamil wild card entry update