Bigg Boss Raiza in Onam Celebration
Bigg Boss Raiza in Onam Celebration

ஓணம் பண்டிகை தினத்தில் புடவையில் அழகு தேவதை போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரைசா.

Bigg Boss Raiza in Onam Celebration : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சேர்ந்த நடிகையாகவும் தற்போது படங்களில் நாயகியாகவும் நடித்து வருபவர் ரைசா வில்சன்.

இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக கேரளத்து புடவையில் அழகு தேவதையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

https://www.instagram.com/p/CEbsCQ4HFt-/?igshid=1wgpdvdm21o0u
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.