தொடர்ந்து விதிமுறை மற்றும் பூர்ணிமாவை கமல் கண்டிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர் மாயா மற்றும் பூர்ணிமா. 

இவர்கள் இருவரும் அடிக்கடி மைக்கை தனியாக வைத்துவிட்டு ரகசியம் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அர்ச்சனா விசித்ரா போன்றவர்கள் விதி மீறினால் கண்டிக்கும் கமல் மாயா மற்றும் பூர்ணிமாவை மட்டும் தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் மைக்கை ஓரமாக நகர்த்தி விட்டு ரகசியம் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த வாரமாவது கமல் இதை தட்டிக் கேட்பாரா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.