பிக் பாஸ் மதுமிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் காமெடி நடிகையாக பல நடிகர் நடிகைகளின் படங்களில் நடித்து வருபவர் மதுமிதா.
இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. ஆனால் இவர் தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்த கஸ்தூரி, சேரனை தவிர மற்ற அனைவர் மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை கூறி வந்தார்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் பிரபலமான ரேஷ்மாவுடன் இணைந்து போட்டோ எடுத்து கொண்டுள்ளார். இதனை ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.