Bigg Boss Losliya Emotional Photoshoot
Bigg Boss Losliya Emotional Photoshoot

லாஸ்லியாவின் போட்டோ ஷூட் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்த பதிவையும் பார்த்த ரசிகர்கள் கவினை காதலித்தது தப்பு என சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Bigg Boss Losliya Emotional Photoshoot : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது லாஸ்லியா ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில், நடிகர் ஆதிக்கு ஜோடியாக ஒரு படத்தில், அறிமுக நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்திலும் என மொத்தம் மூன்று படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ ரெடி.. ரிலீஸ் எப்போது தெரியுமா?? – வெளியான தகவல்.!!

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நடிகர் கவினை காதலித்தார். இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து காதலித்தார்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் எங்கேயும் சந்தித்துக் கொண்டது போலவும் பேசியது போலவும் தெரியவில்லை. இருப்பேன் இருவரும் இன்றுவரை காதலித்து வருவதாக அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

இப்படியான நிலையில் லாஸ்லியா போட்டோஷட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் . மேலும் இந்த புகைப்படத்தின் கேப்ஷனில் அந்த போட்டோவுக்கு நான் வாழ்ந்தேன், காதலித்தேன், இழந்தேன், தவறவிட்டேன், காயப்படுத்தினேன், நம்பினேன், மேலும் தவறுகளையும் செய்தேன், ஆனால் இவை எல்லாவற்றில் இருந்தும் நான் கற்றுக்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் நீங்க கவினை காதலித்தது தவறு என கூறுகிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த போட்டோஷூட்டில் லாஸ்லியா ஓவர் மேக்கப்புடன் இருப்பதை கண்ட ரசிகர்கள் அதனை சுட்டிக் காட்டி வருகின்றனர். மேலும் இந்த போட்டோ ஷூட் சுத்தமா நல்லாவே இல்லை எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.