
பிக் பாஸ் இல்லத்தில் மீண்டும் மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் பிக் பாஸ் 14 போட்டியாளர்களுக்கும் கடுமையான மூன்று டாஸ்க்களை கொடுக்க உள்ளதாக அறிவிக்கிறார். மேலும் 3 வயல் கார்ட் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகின்றனர்.

அவர்கள் இந்த டாஸ்கில் வெற்றி பெற்றால் வீட்டில் தொடர்ந்து இருக்க உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தோல்வியை தழுவினால் வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு வழி விட்டு மொத்தமாக வெளியேற வேண்டும் என அறிவிக்கிறார்.

பூர்ணிமா எனக்கு கேம் புரியல என சொல்கிறார். விஷ்ணு நம்மள வெளியே அனுப்ப தான் இந்த பிளான் போடுறாங்க என சொல்கிறார். இதோ அந்த வீடியோ