Bigg Boss 4 17th Contestant

பிக்பாஸ் வீட்டிற்குள் சப்ரைஸ் என்ட்ரி ஆக புதிய போட்டியாளர் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss 4 17th Contestant : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்களில் ஒருவராக விஜே அர்ச்சனாவும் செல்ல இருந்தார். ஆனால் அவர் பணிபுரிந்து வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்ததாக கூறப்பட்டது.

VJ Archana – 17th Cotestant in Bigg Boss4

இந்த பிரச்சனையால் இறுதிநேரத்தில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்கு செல்லாமல் இருந்து விட்டார். தற்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.