Bigg Boss 3 Salary

Bigg Boss 3 Salary : ஒரு நாளைக்கு ஒரு கோடி கேட்ட கமல் ஹாசனால் தொலைக்காட்சி நிறுவனம் அதிர்ந்து போயுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் புதியதாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவி ஒளிபரப்பிய இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இதுவரை இரண்டு சீசன்கள் முடிவடைந்து விட்டாலும் மக்கள் மத்தியில் இதன் மீதான மோகம் இன்னும் குறைந்தபாடில்லை.

மேலும் விரைவில் இதன் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கலர்ஸ் தமிழ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி மூன்றாவது சீசனையும் விஜய் டிவியே ஒளிபரப்பு செய்யும் எனவும் கமல்ஹாசன் அவர்களே இதையும் தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கமல்ஹாசன் ஒரு நாளைக்கு ரூ 1 கோடி ரூபாய் என 100 நாளைக்கு ரூ 100 கோடி சம்பளமாக கேட்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

கமலின் இந்த அதிரடியால் டிவி சேனல் நிறுவனம் மீள முடியாத அதிர்ச்சியில் மூழ்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.