Bigg Boss 3

Bigg Boss 3 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொள்ள போவதாக இரண்டு நடிகைகளின் பெயர்கள் அடிப்பட தொடங்கியுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான்.

தமிழில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடித்துள்ளன. தற்போது மூன்றாவது சீசனுக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போதில் இருந்தே பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொள்ள போகிறவர்கள் யார் யார் என்ற பெயர்கள் அடிப்பட தொடங்கியுள்ளன.

முதல் ஆளாக நடிகை கஸ்தூரியின் பெயர் அடிபட்டதை அடுத்து தற்போது மைனா படத்தில் வில்லியாக நடித்த நடிகை சூசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே கஸ்தூரி இரண்டாவது சீசனில் கலந்து கொள்ள போவதாக பெயர் அடிபட்ட போது உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா என வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 3 Bigg Boss 3

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.