இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பெரிய போர் களமே உருவாகியுள்ளது இது குறித்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது எலிமினேஷனில் ஷெரினா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்கின் போது ஏற்பட்ட புதிய பிரச்சனையின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனலட்சுமி கையில் இருந்த பொருளை மணிகண்டன் பிடுங்கியதால் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அமைதியாக சென்ற பிக் பாஸ் வீடு இந்த வாரம் மீண்டும் போர்க்களமாக வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.