மீண்டும் பாரதி கண்ணம்மாவுக்கு கல்யாணம் செய்ய முடிவு எடுக்க கண்ணம்மா கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் எல்லோரும் கண்ணம்மா வீட்டுக்கு திரும்பி வந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க ஊர் மக்கள் எப்போ சென்னைக்கு கிளம்ப போறீங்க என சொல்ல சீக்கிரம் போகணும் போய் கல்யாண வேலைகளை பார்க்கணும் என சௌந்தர்யா சொல்ல கணபதி ஏன் இந்த ஊரிலேயே கல்யாணத்தை வைக்க கூடாது என சொல்கிறார்.

பிறகு பாரதியும் சம்மதம் சொல்ல கண்ணம்மாவும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சொல்ல அடுத்து சௌந்தர்யா எனக்கு பரிபூரண சம்மதம் என கூறுகிறார். ஆனால் கண்ணம்மா கல்யாணம் லட்ச லட்சமா செலவு பண்ணி பிரம்மாண்டமா இருக்கணும்னு நான் ஆசைப்படல ஆனா மறக்க முடியாத விஷயமா இருக்கணும். இத்தனை வருஷம் துன்பத்துக்கு ஆறுதலா இருக்கணும் என கண்டிஷன் போடுகிறார்.

இதனால் கல்யாணத்தை எப்படி வித்தியாசமா பண்றது என சௌந்தர்யா பாரதி யோசிக்க சொல்ல பாரதி இது பற்றி கணபதியிடம் ஐடியா கேட்க பிறகு அகிலன் அஞ்சலி வர கணபதி அவர்களிடம் ஐடியா கேட்க எல்லோரும் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அப்போது கண்ணம்மா இங்கு வந்து என்ன யோசனை என கேட்கிறார். கல்யாணம் வித்தியாசமா இருக்கணும்னு சொன்ன என்ன பண்ணனும்னு யோசிச்சிட்டு இருக்கும் என பாரதி சொல்ல நான் வேணும்னா க்ளூ கொடுக்கிறேன்.

இந்த கல்யாணம் எப்படி நடக்கணும்னு என்கிட்ட தெளிவான ஐடியா இருக்கு என சொல்ல அந்த ஐடியா என கேட்க அதை சொல்ல மாட்டேன் என ஷாக் கொடுக்கிறார். பிறகு இரவு நேரத்தில் கண்ணம்மா தூங்கியதும் பாரதி ரூமுக்குள் சென்று டைரியில் கண்டிப்பாக ஏதாவது எழுதி வைத்திருப்பா என டைரியை தேட போய் கண்ணம்மாவிடம் சிக்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.