நீதிமன்றத்தில் விவாகரத்து கேஸில் பாரதி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியாகியுள்ளார் கண்ணம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா குடும்பத்தோடு கோர்ட்டுக்கு வந்து இறங்கி கோர்ட்டில் என்ன நடக்க போகுது என புலம்பி கொண்டிருக்கிறார்.

நீதிமன்றத்தில் விவாகரத்து கேசில் பாரதி சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியான கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அப்போது கணேசன் சௌந்தர்யாவுக்கு போன் போட்டு பாரதி இங்கிருந்து கிளம்பிட்டார் அங்கு வந்து இறங்கிட்டார் அவர் போன் ரீச் ஆகல என சொல்கிறார். மேலும் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க பாரதி விவாகரத்துக்கு ஓகே சொல்ல மாட்டாரு பாய் தான் மேல வாய்தா போடுவாரு கண்ணம்மா மனசு கண்டிப்பா மாறும் என கூறுகிறார்.

பிறகு பாரதி வந்து இறங்கியதும் கண்ணம்மா வரதா சொன்னாங்க எங்க அவ என்ன கேட்க அவ சிட்டிக்கு வெளியவே இறங்கிட்டா என்ன சொல்லிக் கொண்டிருக்க கண்ணம்மா ஆட்டோவில் வந்து இறங்குகிறார்.

மறுபக்கம் வெண்பா மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லி அவரை மருத்துவமனையில் அனுமதி செய்து சிகிச்சை அளிக்க கோர்ட் உத்தரவு அளிக்கிறது. பிறகு கண்ணம்மா வந்ததும் சௌந்தர்யா தயவு செஞ்சு விவாகரத்து வேணும்னு மட்டும் சொல்லிடாத நீ எவ்வளவு நாள் வேணாலும் டைம் எடுத்துக்க ஆனால் பாரதியோட சேர்ந்து வாழ் என சொல்ல உறுதியான மனநிலை இல்லாதவரோடு சேர்ந்து வாழ முடியாது என வற்புறுத்தாதீங்க என சொல்லி உள்ளே சென்று விடுகிறார்.

நீதிமன்றத்தில் விவாகரத்து கேசில் பாரதி சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியான கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

உள்ளே போகும்போது வெண்பா கண்ணம்மாவை பார்த்து போயும் போயும் என்கிட்ட தோத்துட்ட என நக்கல் அடிக்க கண்ணம்மா விவாகரத்து வாங்கி பிரிய போவதில் உறுதியாக இருப்பதாக கூறுகிறார். அதன் பிறகு பாரதி வர வெண்பா பாரதியை பார்த்து பேச அவர் கோபப்பட்டு திட்டிவிட்டு உள்ளே செல்கிறார். பிறகு கோர்ட்டில் நீதிபதி பாரதி மற்றும் கண்ணம்மாவிடம் ஆறு மாசம் சேர்ந்து வாழ்ந்தீங்க இப்போ உங்களுடைய மனநிலை என்ன என கேட்க கண்ணம்மா எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் விடுதலை தான் வேண்டும் எனக்கு விவாகரத்து கொடுத்துடுங்க என சொல்கிறார்.

நீதிமன்றத்தில் விவாகரத்து கேசில் பாரதி சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியான கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அடுத்து நீதிபதி பாரதி கேட்க அவர் அமைதியாகவே இருக்க கண்ணம்மா நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும் வாய்தா மேல வாய்தா போட்டு இழுக்கத்தான் நினைப்பீங்க ஆனா என்னைக்கா இருந்தாலும் உங்ககிட்ட இருந்து விவாகரத்து வாங்குவதில் நான் உறுதியாக இருக்கேன் என மனதுக்குள் சொல்லிக் கொள்ள பாரதி எனக்கும் விவாகரத்து வாங்குவதில் தான் விருப்பம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.