ஹேமா குறித்த ரகசியம் அஞ்சலிக்கு தெரிய வருகிறது.

Bharathi Kannamma Episode Update 27.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா தன்னுடைய இரண்டாவது மகளை கண்டுபிடித்து அவரை தன்னுடன் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு வெண்பா கூறியதுபோல தன்னுடைய கணவர் பாரதியை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார். பாரதியை விவாகரத்து செய்வதால் தன்னுடைய வாழ்க்கையில் எதுவும் மாறப் போவதில்லை என கூறுகிறார்.

ராகு, கேது மற்றும் சனி தோஷம் விலக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்..

இந்த பக்கம் அஞ்சலி கண்ணம்மா போனில் கூறிதை மனதில் வைத்துக் கொண்டு சௌந்தர்யாவிடம் சென்று ஹேமா கண்ணம்மாவின் இரண்டாவது மகளா? இல்லை அவளை உண்மையாகவே தத்தெடுத்து தான் வந்தோமா என கேட்கிறார். சௌந்தர்யா அஞ்சலியிடம் ஹேமா குறித்த ரகசியத்தை கூறுகிறார். அதன்பின்னர் ஹேமாவின் மீது அதிக பாசத்தை கொட்டுகிறார் அஞ்சலி.

மேலும் சௌந்தர்யா, அகிலன் மற்றும் சௌந்தர்யாவின் கணவர் ஆகியோர் அமர்ந்து பாரதியும் கண்ணம்மாவும் சேர்த்து வைக்க என்ன செய்யலாம் என ஆலோசனை செய்து வருகின்றனர். இருவரையும் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வைக்கும் வகையில் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என சௌந்தர்யா கூறுகிறார். இந்த நேரத்தில் இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை நினைத்து எனக்கு நெஞ்சு வலியே வந்து விடும் போல என சௌந்தர்யாவின் கணவர் கூறுகிறார். இதனால் சௌந்தர்யா என்னை இப்படியெல்லாம் பேசுறீங்க என கணவரை திட்டி விட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்புகிறார். ‌‌

Seafarer Ashwin Surprise His Wife Deepa Vani | Flash Mob | First Time In Chennai |

பின்னர் அஞ்சலி ரூமிற்குள் இருக்கும்போது அகிலனிடம் இது குறித்து ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார். எட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது குடும்ப ரகசியமா அதை குறைந்த பேருக்கு தெரிஞ்சா நல்லது என யாரிடமும் சொல்லலை என கூறுகிறார். பின்னர் ஹேமா வந்து சித்தி கூப்பிட்டீங்களா என கேட்க அதன் பின்னர் அவருக்கு கிப்ட் கொடுத்தேன் தலைவாரி விடுகிறார். அதன் பின்னர் என்னை இனி அம்மானு கூப்பிடுவியா என கேட்கிறார் அஞ்சலி. ஹேமாவும் ஓகே என சொல்லிவிட்டு அம்மா என கூறுகிறார். மேலும் அகிலனை அப்பா என கூப்பிடுவதாக கூறுகிறார்.

ஹேமா அஞ்சலியை அம்மா எனவும் அகிலனை அப்பா எனவும் கூறுகிறார். மூன்று பேரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.