பாரதிக்கு நினைவுகள் மீண்டும் வர கடைசியில் அதிர்ச்சி கொடுத்துள்ளார் கண்ணம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மாவை பார்க்க தேவிபட்டினம் பீச்சுக்கு கிளம்ப அப்போது சௌந்தர்யா கோவிலில் இருந்து வர பாரதி அவரிடம் நான் கண்ணம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீங்க அவளை ஏத்துக்கணும் என சொல்ல சௌந்தர்யா சம்மதம் தெரிவிக்கிறாள்.

அடுத்து எல்லோரும் கிளம்பி பீச்சுக்கு போக பாரதி அங்கு கண்ணம்மாவை தேடி அலைய கண்ணம்மா இல்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள போவதாக பீச்சுக்குள் இறங்க போக அப்போது கண்ணம்மா தடுத்து நிறுத்துகிறாள்.

பிறகு பாரதி கண்ணம்மா கன்னத்தை பிடித்து பேச தொடங்குகிறார். பிறகு பிறந்த நாள் கிப்ட் கேட்க கண்ணம்மா கண்ணை மூட சொல்லி கையை வயிற்றில் வைத்து பீல் பண்ண சொல்ல பாரதிக்கு பழைய நினைவுகள் வரத் தொடங்குகிறது. பிறகு தனக்கு நினைவு வந்து விட்டதாகவும் குழந்தையின் பெயர் ஹேமா, லட்சுமி என சொல்ல எல்லோரும் மகிழ்ச்சி அடைய பாரதி மயங்க தொடங்க ஹேமாவும் லட்சுமியும் அப்பா என ஓடி வர பாரதி மயங்காமல் இருக்க பழைய நினைவுகள் முழுவதுமாக திரும்புகிறது.

அடுத்து கண்ணம்மா சரி நான் கிளம்பறேன் என அதிர்ச்சி கொடுத்து குழந்தைகளை அங்கிருந்து அழைத்து செல்கிறார். சௌந்தர்யா தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் கண்ணம்மா கிளம்ப பாரதி அவளை தடுக்காதீங்க, நடக்கிறது எல்லாம் நன்மைக்கே என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.