ஸ்கூலுக்கு போன கண்ணம்மாவிடம் அம்மா கேட்ட கேள்வியால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 11.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியைப் பார்த்து நேரில் பேசுவதற்காக ஸ்கூலுக்கு சென்றுள்ளார் கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் பாரதியுடன் பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு நேரடியாக கேட்டு விட வேண்டும் என கண்ணம்மா யோசிக்கிறார். பாரதி கண்ணம்மா தனது பிறந்தநாளில் லஷ்மிக்கு அப்பா யார் என சொல்லப் போவதாக சொல்லி இருப்பதை நினைத்து பார்க்கிறார்.

இந்த நேரத்தில் ஹேமா அங்கு வந்து விடுகிறார். லஷ்மி ஸ்கூலுக்கு வரவில்லை என ஹேமா சொல்கிறார். ஏன் வரவில்லை என பாரதி கேட்க ஹேமா சொல்லுங்க சமையல் அம்மா என கேட்கிறார். கண்ணம்மா லஷ்மி உன்கிட்ட சொல்லலையா நீயே சொல்லு என கூறுகிறார். லஷ்மி என்கிட்ட எதுவும் சொல்லல ஆனா உங்களோட பிறந்தநாள் விழாவில் அவங்க அப்பா வருவதால அதுக்கான டெக்கரேஷன் வேலைகளை செய்துக்கிட்டு இருப்பா கரெக்ட்டா எனக்கேட்க எப்படி லட்சுமி ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டாளா என கண்ணம்மா கேட்கிறார். இல்லை எதுவும் சொல்லல என பல அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கா என கண்ணம்மா கூறுகிறார்.

இந்த நேரத்தில் லட்சுமியின் தோழிகள் இருவர் வந்து கண்ணம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறுகின்றனர். மேலும் நாங்க கேக் ஆர்டர் செய்திருக்கும் உங்க பேர் என்ன என கேட்கின்றனர். ஹேமாவும் நானும் பலமுறை உங்களிடம் இதை கேட்கணும்னு நெனச்சிருக்கேன் உங்க உண்மையான பெயர் என்ன சமையல் அம்மா என கேட்கிறார். இதனால் பாரதி அதிர்ச்சி அடைகிறார். கண்ணம்மா னு பேரை சொன்னால் எப்படி எங்க அப்பா அம்மா பேரு லட்சுமியோட அப்பா பேரும் ஒரே மாதிரி இருக்கு என கேள்வி மேல கேள்வி கேட்பா என யோசிக்கிறார்.

கண்ணம்மாவும் பெயரை சொல்லாமல் சமையல் அம்மா என்று பெயர் போடுங்க அப்படி தானே நீங்களும் கூப்பிடுறீங்க என கூறுகிறார். பிறகு பாரதி ஹேமாவை வா சாப்பிடலாம் என அங்கிருந்து அழைத்துச் சென்றுவிடுகிறார்.

வெண்பாவை பார்க்கப்போன மாயாண்டி ஐந்து லட்சம் பணம் என்னாச்சு என கேட்க நான் எதுக்கு பணம் தரனும் என வெண்பா கோபப்படுகிறார். உங்களுக்கு அனுப்பனும் சேம்பல் ஆடியோ மாதிரி பாரதிக்கு 1 அனுப்பவா என பிளாக்மெயில் செய்தார் மாயாண்டி. இருபத்தி நான்கு மணி நேரம் டைம் தரேன் அதுக்குள்ள 5 லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணனும் என சொல்லியிருந்தார். வசமாக சிக்கி உள்ள வெண்பா வேறு வழியில்லாமல் சரி ரெடி பண்றேன் என சொல்கிறார்.

இந்த பக்கம் பாரதி செய்வதை நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றனர் வீட்டில் உள்ளவர்கள். நாம பாரதிக்கு சப்போர்ட் செய்கிறோம் அன்னிக்கு எதுவும் சரியில்லை என அகிலன் கூறுகிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா வந்து நிற்க வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். லட்சுமிக்கு நான் என்ன பதில் சொல்றது. அவருடைய அப்பா யாருன்னு நான் சொல்றேனு சொன்னது அவ கற்பனை இல்ல அவங்க அப்பாவுடன் வாழ ஆரம்பித்துவிட்டால் இந்த முறை அவளை ஏமாற்றினா அவளை ரொம்ப பாதிக்கும் என கண் கலங்குகிறார்.

தனியாளா நான் எவ்வளவுதான் போராடுவது என உனக்கு நாங்க இருக்கோம் என சௌந்தர்யா சொல்ல உங்க பையனே என்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு வரச் சொல்லுங்கள் பார்க்கலாம் என சொல்ல சௌந்தர்யா அமைதியாகி விடுகிறாள். முடியாது என்ன நடக்குமோ ஏது நடக்குமோ உங்களுக்கு பயம் அதனால நீங்க சொல்ல மாட்டீங்க. நான் தான் இவ்வளவு நாளா பழியை சொன்னது என்ன இப்போ என்னுடைய பொண்ணு மேலயும் பழி விழ தொடங்கிடுச்சு என கண்ணம்மா கூறுகிறார். அகிலனிடம் எப்படியாவது உன் அண்ணனை இந்த பிறந்தநாள் விழாவிற்கு கூட்டிட்டு வா என அறிகிறார். அகிலன் நான் எப்படியாவது கூட்டிட்டு வரேன் என வாக்கு கொடுக்கிறார். பிறகு சௌந்தர்யா அழுது அழுது முகமெல்லாம் வீங்கி போய் இருக்கு போய் முகத்தை கழுவிட்டு வா என சொல்ல என்னுடைய ரூமை யூஸ் பண்ணிக்கோங்க என அகிலன் கூறுகிறார்.

பிறகு கண்ணம்மா ரூமில் இருந்து வெளியே வர அந்த நேரத்தில் பாரதி உள்ளே வருகிறார். தன் அம்மாவைப் பார்த்த அவர் கடுப்பாகி நான் இல்லாத நேரத்தில் இவ எதுக்கு இங்கே வரணும் எல்லோரும் சேர்ந்து புதுசா திட்டம் போடுறீங்களா என கோபப்படுகிறார். கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பேசி என பாரதியை அவருடைய அப்பா திட்டுகிறார். அகிலனும் எதையோ சொல்ல நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதே என பாரதி திட்டுகிறார். நானே பதில் சொல்கிறேன் என சொல்லிவிட்டு கண்ணம்மா பேசத் தொடங்குகிறார். என் பொண்ணுக்கு ஒரு வாக்கு கொடுத்து இருக்கேன் அதை நிறைவேற்றும் அதுக்கு நீங்க என்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு வரணும் என சொல்கிறார். இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ள இத்துடன் பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.