
ஹேமா விஷயத்தில் கண்ணம்மா ஒரு முடிவை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி இணைந்து ஒரு மணி நேரம் எபிசோடாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோடில் சௌந்தர்யா பாரதியிடம் மொத்த உண்மைகளையும் சொல்லி நீங்க ரெண்டு பேரும் சேரனும் என்ற நட்பையும் தான் நான் இப்படி செய்தேன் என கதறி அழுகிறார். நான் சொல்வதெல்லாம் உண்மை இது ஏன் என்று பேத்திங்க மேல சத்தியம் என சௌந்தர்யா சத்தியம் செய்ய பாரதி போதும் என சொல்லிவிட்டு சேரில் நொறுங்கிப் போய் உட்காருகிறார்.

அதன் பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவை அழைத்து ஹேமா உன்னுடைய பொண்ணுன்னு தெரிஞ்சு நீ வந்து என்கிட்ட கேட்டதும் நான் உன்ன பொறுமையா இருக்க சொல்லி கேட்டேன் நீயும் இவ்வளவு நாளா பொறுமையாக தான் இருந்த. உன் கண்ணு முன்னாடியே வேற யாரோ ஒருத்தியை அம்மான்னு காட்டும் போது அது உனக்கு எவ்வளவு வலியா இருந்திருக்கும் என்று எனக்கு தெரியுது அதை நான் தப்பு சொல்லல. இப்ப நான் உன்கிட்ட மடி பிச்சை கேட்கிறேன் ஹேமானா பாரதிக்கு உயிர். ஹேமா இல்லாம அவனால இருக்க முடியாது. தயவுசெய்து ஹேமாவ பாரதி கிட்ட இருந்து பிரிச்சுடாத என கேட்கிறார்.
அவர்கிட்ட இருந்து ஹேமாவ பிரிக்கணும்னு நான் நினைச்சிருந்தா என்னைக்கோ பிரிச்சு இருப்பேன். உங்களுக்காகவும் அவருக்காகவும் மட்டும்தான் நான் ஹேமாவ இங்க விட்டு வச்சிருக்கேன். அவர் ஹேமா மேல எவ்வளவு பாசம் வச்சுட்டு இருக்காங்க எனக்கு தெரியும் ஹேமாவும் அவர் மேல நிறைய பாசம் வைத்திருக்கா. அவ யார்கிட்ட இருக்கா அவங்க அப்பா கிட்ட தானே இருக்கா இருக்கட்டும் நான் பிரிக்க மாட்டேன் என சொல்கிறார்.

பிறகு பாரதியிடம் சென்று இவ்வளவு விஷயம் தெரிந்த பிறகும் நான் அவளோட ஹேமாவ சேர விட மாட்டேன் என்று பிரிக்க முயற்சி பண்ணுங்க நான் சும்மா இருக்க மாட்டேன் இனி எந்த எல்லைக்கும் போவேன். அதோட நீங்க ஹேமாவ பாக்க கூட முடியாது உங்களிடம் இருந்து நான் நிரந்தரமா பிரிச்சிடுவேன் என சொல்கிறார். இதைக் கேட்டு பாரதி உட்பட அனைவரும் அதிர்ச்சடைகின்றனர்.
அதன் பிறகு சிவகாமி குடும்பம் அனைவரும் பாரதியை மற்றும் கண்ணம்மாவை சேர்ந்து வாழ சொல்லி கேட்டுக்கொள்கின்றனர். சிவகாமி உங்க குழந்தைகள் காக நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும் சேர்ந்து வாழ்வீங்கனு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க என கேட்கிறார். இப்பதான் இன்றைய பாரதி கண்ணம்மா ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.