பாரதி கண்ணம்மா சீரியல் அகிலனுக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது தெரியவந்துள்ளது.

Bharathi Kannamma Akhilan Change Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நாயகன் நாயகி எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் இந்த சீரியலில் பாரதி தம்பியாக நடித்து வரும் அகிலனுக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

தற்போது வெள்ளித்திரையில் பிசியாகி வருகிறார் அகிலன். இதனால் அவர் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலக இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். அது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் பாரதிகண்ணம்மா சீரியல் அகிலனுக்கு பதிலாக நடிப்பது யார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வாரத்தில் அஞ்சலிக்கு சீமந்த விழா நடைபெற உள்ளது. இதற்கான சூட்டிங் நடந்து முடிந்த நிலையில் அதுகுறித்த காட்சியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் அகிலனுக்கு பதில் வேறு ஒருவர் நடித்த உள்ளது தெரியவந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.