கண்ணம்மாவை கெடுக்கப் போய் பாரதியிடம் சிக்கி உள்ளார் விஜய்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் காட்டுக்குள் விஜய் கண்ணம்மாவை துரத்திக் கொண்டு வர மறுபக்கம் பாரதி காரில் வந்து கொண்டிருக்க அப்போது போன் செய்யும் மது ஸ்கூலில் நடந்த விஷயங்களை சொல்லி பாரதியை திட்டுகிறார்.

கண்ணம்மாவை நீ உண்மையாகவே பிரண்டாக நினைத்தால் அவளை எப்படியாவது காட்டுக்குள் இருந்து கூட்டிட்டு வா அதுக்கப்புறம் உன்னுடைய விருப்பம் என சொல்லி போனை வைக்க பாரதி மீண்டும் காட்டை நோக்கி செல்கிறார்.

ஒரு பக்கம் கண்ணம்மா விஜய்யிடம் இருந்து தப்பித்து ஓடி வர மறுபக்கம் பாரதி கண்ணம்மா கண்ணம்மா என அழைத்துக் கொண்டு காட்டுக்குள் நுழைய ஒரு கட்டத்தில் விஜய் கண்ணம்மாவை பிடித்து கீழே தள்ளி அவளை கெடுக்க முயற்சி செய்ய பாரதி அந்த இடத்திற்கு வந்து விஜயை அடித்து துவம்சம் செய்கிறார்.

பாரதி விஜயின் முகமூடியை அகற்ற முயற்சிக்கும் போது அவனது நெஞ்சில் A என பச்சை குத்தப்பட்டு இருப்பது பாரதிக்கு தெரிய வருகிறது. பிறகு விஜய் அங்கு பாரதியின் கண்ணில் மண்ணை தூவி விட்டு எஸ்கேப் ஆகி விடுகிறான்.

அதன் பிறகு பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு காரில் அழைத்து வரும்போது கண்ணம்மாவிடம் ஏதாவது பேசு, என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு என தொடர்ந்து பேசி வர கண்ணம்மா பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். பிறகு தெரு முனையில் நிறுத்து, மது காத்துகிட்டு இருக்கா நான் அவளோட போறேன் என சொல்லி காரில் இருந்து இறங்கி மதுவுடன் வீட்டுக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.