BhagyaRaj

சமீபத்தில் கருத்துகளை பதிவு செய் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பாக்கியராஜ் பேசியதாவது,

“என்னுடைய வெற்றிக்கு காரணம் என் கருத்துக்களை சினிமாவில் பயமில்லாமல் பதிவு செய்ததால் தான். என் இயக்குநரிடம் இந்தக்காட்சி நல்லால்லை என்று ஓப்பனாக சொல்லிடுவேன். அவர் கோபப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன். அதுபோல் இந்தப்படத்தில் குறிப்பாக இந்த விழாவில் பெண்களை கெளரவித்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்.எல். ஏ விஜயதரணி வந்திருக்கிறார். அவர் எதாவது கோரிக்கை இருந்தால் சொல்லுங்கள் என்றார். ஒரே கோரிக்கை தான். எல்லாத்தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே சின்னப்படங்களும் ஓட வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் படம் நல்லாருந்தால் நிச்சயமாக பாராட்டிவிடுவார்கள். இந்தப்பட டீம் சின்சியராக உழைத்திருக்கிறார்கள். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்காக தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு தேவை. இப்போது சினிமாவிற்கே விழிப்புணர்வு தேவைப் படுகிறது.” என்றார்

மேலும் பெண்களும் உறுதியாக இருக்க வேண்டும், தவறு நடக்க நீங்களும் தான் காரணம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என பேசியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.